"கல்கா மெயில்" தடம் புரண்டது: 35 பேர் பலி, 200 பயணிகள் காயம்

ரயில் தடம் புரண்டதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. இதுகுறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
"கல்கா மெயில்" தடம் புரண்டது: 35 பேர் பலி, 200 பயணிகள் காயம்
Published on
Updated on
1 min read

புதுதில்லி, ஜூலை 10- ஹவுராவில் இருந்து தில்லி நோக்கி வந்து கொண்டிருந்த "கல்கா மெயில்" தடம் புரண்டது. இதில், 35 பயணிகள் உயிரிழந்தனர். மேலும், சுமார் 200 பேர் காயமடைந்தனர்.

உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஃபதேபூர் என்னுமிடத்தில் மால்வே ரயில் நிலையம் அருகே இச்சம்பவம் நிகழ்ந்தது.

இந்த விபத்தில் 35 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 200 பேர் காயமடைந்தனர்.

இத்தகவலை வடக்கு மத்திய ரயில்வே பிரிவின் முதன்மை மக்கள் தொடர்பு அதிகாரி சந்தீப் தாக்கூர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அந்த ரயிலின் 13 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து விலகி கவிழ்ந்தது. ரயில் தடம் புரண்டதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. இது சதிவேலையாக இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. இதுகுறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு மீட்புக் குழுவினர் விரைந்து வந்தனர். காயமடைந்த அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.