வாஷிங்டன், ஜூலை.15: பாகிஸ்தான் உளவுத்துறை தலைவர் அகமது சுஜா பாஷா அமெரிக்க உளவுத்துறை(சிஐஏ) அதிகாரிகளுடன் 2 நாள் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் பாகிஸ்தானுக்குப் புறப்பட்டுச் சென்றார்.
இந்த பேச்சின்போது இருதரப்பினரும் தங்கள் பக்கம் உள்ள கவலைகளை பகிர்ந்துகொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஆண்டு தொடக்கத்தில் கொலைக்குற்றச்சாட்டில் அமெரிக்க தூதரக அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டதில் இருந்து சிஐஏவுக்கும், ஐஎஸ்ஐக்கும் இடையேயான உறவு சீர்குலைந்திருந்தது. இந்த நிலையில் இருதரப்பினரும் நம்பிக்கையை வலுப்படுத்தும்விதமாக பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற இருதரப்பினரும் ஒப்புக்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த பேச்சுவார்த்தையின்போது பாகிஸ்தானில் ஐஎஸ்ஐ மீது நம்பிக்கை வைக்காமல் சிஐஏவின் நடவடிக்கைகள் அதிகரித்து வருவது குறித்து பாஷா கவலை தெரிவித்ததாகவும் தகவல்கள் தெரிவித்தன.