சென்னை, ஜூலை. 15: ஈரோடு மாவட்ட ஆட்சியர் அனந்தகுமார் மாற்றப்பட்டு போக்குவரத்துத் துறை உதவிச் செயலராக இருந்த சி.காமராஜ் அந்த பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார்.
அனந்தகுமார் தனது மகளை ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில் சேர்த்து படிக்கச் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் மீன்வளத்துறை ஆணையராக இருந்த செல்லமுத்து மாற்றப்பட்டு, தோட்டக்கலைத்துறை செயலராக மாற்றப்பட்டுள்ளதாக அரசின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.