புதுதில்லி, ஜூலை.15: சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்ரமணியத்தின் ராஜிநாமாவை மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. தற்போது அவரது ராஜிநாமா கடிதம் இறுதி ஒப்புதலுக்காக குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டுள்ளது.
தொலைத்தொடர்பு அமைச்சர் கபில்சிபல் தொடர்புடைய வழக்கு ஒன்றில் தனியார் வழக்கறிஞரை நியமிக்கும் அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சுப்ரமணியம் கடந்த வாரம் ராஜிநாமா செய்தார்.
சொலிசிட்டர் ஜெனரல் பதவியின் கெளரவத்தைக் காப்பாற்றவே தான் ராஜிநாமா செய்ததாக சுப்ரமணியம் கூறியிருந்தார்.
சட்ட அமைச்சராக இருந்த வீரப்பமொய்லி அந்த இலாகாவில் இருந்து மாற்றப்பட்ட பிறகு புதிய சட்ட அமைச்சராக பதவியேற்ற சல்மான் குர்ஷித் அவரது ராஜிநாமாவை ஏற்றுக்கொண்டார். அது சுப்ரமணியத்துக்கும் தெரிவிக்கப்பட்டது.
சுப்ரமணியம் சொலிசிட்டர் ஜெனரலாக ஜூன் 15, 2009-ல் நியமிக்கப்பட்டார். 3 ஆண்டுகள் அவர் அந்த பதவியில் இருந்துள்ளார்.