லண்டன், ஜூலை.24: இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் காய்ச்சலுடன் விளையாடியது தெரியவந்துள்ளது.
சர்வதேசப் போட்டியில் 100-வது சதத்தை நிறைவுசெய்ய சச்சினுக்கு இன்னும் ஒரு சதம் மட்டுமே தேவை. இந்த நிலையில் நேற்றைய போட்டியில் சச்சின் சதமடிப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் ஒன்றரை மணி நேரம் களத்தில் நின்று 58 பந்துகளை எதிர்கொண்டு 34 ரன்களை மட்டுமே எடுத்து அவுட் ஆனார்.
அவுட் ஆனவுடனேயே காய்ச்சல் காரணமாக அவர் தான் தங்கியிருந்த ஹோட்டலுக்கு உடனடியாக திரும்பிவிட்டார். பின்னர் அங்கு சில மாத்திரைகளை உட்கொண்டு தூங்கி ஓய்வெடுத்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.