கோவை, ஜூலை. 24: மத்திய அமைச்சரவையில் இருந்து திமுகவைச் சேர்ந்த 2 அமைச்சர்கள் விலக்கப்பட்டதைத் தொடர்ந்து புதிதாக 2 பேரைச் சேர்ப்பது குறித்து திமுக பொதுக்குழுவில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
முன்னதாக பொதுக்குழுவின்போது இதுகுறித்து முடிவெடுக்கப்படும் என்று திமுக தலைவர் கருணாநிதி சமீபத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்திருந்தார்.
எனினும் இதுகுறித்து பொதுக்குழுவில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
மேலும் பொதுக்குழு கூட்டத்தின்போது கட்சித் தலைமையில் மாற்றம் செய்யப்படும் என்றும்கூட செய்திகள் வெளியாயின. எனினும் கட்சித் தலைவராக கருணாநிதியே தொடர்வார் என்று பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.