புதுதில்லி, ஜூலை.31: லோக்பால் மசோதா தொடர்பாக ஜந்தர் மந்தர் தவிர வேறு இடத்திலும் உண்ணாவிரதம் நடத்தத் தயாராக இருப்பதாக அண்ணா ஹசாரே குறிப்பிட்டார். எனினும் பொதுமக்கள் தனது உண்ணாவிரதத்தில் கலந்துகொள்வதற்கு வசதியாக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட வேண்டும் என்றார் அவர்.
ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த அனுமதிக்கவில்லை எனில் வேறு எந்த இடத்தில் நடத்துவது என்று நீங்களே சொல்லுங்கள். பொதுமக்களும் உண்ணாவிரதத்தில் பங்கேற்பதற்கான வசதிகள் இருந்தால் அந்த இடத்தில் உண்ணாவிரதம் இருப்பதில் ஆட்சேபணை இல்லை என்று அவர் குறிப்பிட்டார்.