புதுதில்லி, ஜூலை.31: காமன்வெல்த் போட்டிக் குழுவின் முன்னாள் தலைவர் சுரேஷ் கல்மாடி மருத்துவ பரிசோதனைக்காக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நாளை அனுமதிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காமன்வெல்த் போட்டி ஏற்பாடுகளில் நிகழ்ந்த ஊழல்கள் தொடர்பாக கல்மாடி தற்போது நீதிமன்றக் காவலில் உள்ளார். அவரிடம் சில பரிசோதனைகள் நடத்துவதற்காக சில நாட்கள் அவர் எய்ம்ஸ் மருத்துவமனையில் இருப்பார் என்று திகார் சிறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.