பெங்களூர், ஜூலை.31: எடியூரப்பாவின் ராஜிநாமாவைத் தொடர்ந்து கர்நாடக முதல்வராக முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் டி.வி.சதானந்த கெளட தேர்ந்தெடுக்கப்படலாம் என்று தெரிகிறது.
ஆளுநர் பரத்வாஜை இன்று மாலை சந்தித்து எடியூரப்பா ராஜிநாமா கடிதத்தை அளிக்க உள்ளார். அதன் பிறகு நடைபெறும் பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் அடுத்த முதல்வர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
இவரது பெயரை எடியூரப்பாவே கட்சித் தலைமையிடம் பரிந்துரைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.