தும்கூர், ஜூலை.31: கர்நாடகாவின் தும்கூர் மாவட்டத்தில் பீமசந்திரா கிராமம் அருகே லாரி-கார் மோதலில் காரில் பயணம் செய்த 7 பேர் உயிரிழந்தனர். 2 பேர் காயமடைந்தனர்.
காரின் டிரைவர் மற்றொரு வாகனத்தை முந்த முயன்றபோது எதிரே வந்த லாரியுடன் மோதி விபத்துக்குள்ளானதாக போலீசார் தெரிவித்தனர்.