திருச்சி, ஜூலை 31: திருச்சியில் தொழில்நுட்பப் பூங்காவில் அனுமதி பெற்ற நிறுவனங்கள் உடனடியாக இயங்கத் தொடங்கவில்லை என்றால் அனுமதி ரத்து செய்யப்படும் என்றார் அமைச்சர் உதயகுமரன்.
இன்று திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் உதயகுமரன், முந்தைய ஆட்சியில் திருச்சியில் ஐடி - தொழில்நுட்பப் பூங்கா தொடங்கி வைத்தார்கள்; ஆனால் அடிப்படை வசதிகள் எதுவும் செய்து கொடுக்கப்படவில்லை. எனவே அது சிறுவர் பூங்கா போல் ஆகிவிட்டது.
தற்போது நவீனப் படுத்தும் பணிகள் நடந்துவருகின்றன. எனவே, தொழில்நுட்பப் பூங்காவில் இடம் ஒதுக்கீடு பெற்றும் இன்னும் இயங்கத் தொடங்காத நிறுவனங்களின் ஒடுக்கீடு ரத்து செய்யப்படும் என்று எச்சரித்தார்.