திருச்சி, ஜூலை 31: ராசாத்தி அம்மாளின் அக்கவுண்டண்ட் ரமேஷ், இன்று திருச்சியில் நிலமோசடி புகார் தொடர்பாக கைது செய்யப்பட்டார்.
திருச்சி எடமலைப்பட்டிபுதூர் காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட புகாரைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். திருச்சி ராஜீவ்காந்தி நகரைச் சேர்ந்த நிர்மலா தேவி மற்றும் 31 பேர் கொடுத்த நில மோசடி புகாரைத் தொடர்ந்து, போலீஸார் அவரைக் கைதுசெய்துள்ளனர்.