புதுடில்லி, ஜூலை 31: நாளை நாடாளுமன்றக் கூட்டம் துவங்கவுள்ள நிலையில், மத்திய நிதியமைச்சரும் அவை முன்னவருமான பிரணாப் முகர்ஜி இன்று பா.ஜ.க மூத்த தலைவர்களை சந்தித்து பேசினார்.
அத்வானியில் இல்லத்தில் அவரை பிரணாப் முகர்ஜி சந்தித்தபோது சுஷ்மா ஸ்வராஜும் உடன் இருந்தார். பா.ஜ.க, தலைவர்களிடம் பிரணாப் முகர்ஜி, எந்த விவகாரத்தையும் விவாதிக்க அரசு தயாராக உள்ளது. சபையை எதிர்க்கட்சிகள் அமைதியாக நடத்த உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். பதிலுக்கு பாரதிய ஜனதாக் கட்சித் தலைவர்கள் விலைவாசி மற்றும் ஊழல் தொடர்பாக ஓட்டெடுப்புடன் கூடிய விவாதம் நடத்த வேண்டும் என்று கூறினார்கள்.
பெங்களூருவில் கர்நாடக மாநிலப் பிரச்னையை கவனிக்க அருண்ஜெட்லி சென்றுள்ளதால் இந்தக் கூட்டத்தில் அவர் பங்கேற்கவில்லை.