புதுதில்லி, ஜூலை.31: நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் நாளை தொடங்குவதை முன்னிட்டு குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீலை பிரதமர் மன்மோகன் சிங் இன்று சந்தித்துப் பேசினார்.
மழைக்கால கூட்டத்தொடர் குறித்தும், இதர தேசிய, சர்வதேச விவகாரங்கள் குறித்தும் பிரதிபாவிடம் மன்மோகன் விளக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுமார் 30 நிமிடங்கள் இருவரும் சந்தித்து பேசிக்கொண்டிருந்ததாக குடியரசுத் தலைவர் மாளிகை செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.
பிரதிபா பாட்டீல் தென்கொரியா மற்றும் மங்கோலிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றுவிட்டு நேற்று இரவுதான் தில்லி திரும்பியிருந்தார். அவரின் இந்த பயணம் குறித்தும் பிரதமர் கேட்டறிந்ததாக தகவல்கள் தெரிவித்தன.