மாயமான துணை நடிகை காதலனிடம் இருந்து மீட்பு

சென்னை, ஜூலை.31: விமான நிலையத்தில் மாயமான துணை நடிகையை, திருவான்மியூரில் போலீசார் மீட்டனர். காதலன் ரியாஸுடன் இருந்த அவரை மீட்டு கணவருடன் அனுப்பி வைத்தனர். இதுபற்றிய விவரம்: நாகர்கோவிலை சேர்ந்தவர் ராஜா
Published on
Updated on
1 min read

சென்னை, ஜூலை.31: விமான நிலையத்தில் மாயமான துணை நடிகையை, திருவான்மியூரில் போலீசார் மீட்டனர். காதலன் ரியாஸுடன் இருந்த அவரை மீட்டு கணவருடன் அனுப்பி வைத்தனர்.

இதுபற்றிய விவரம்:

நாகர்கோவிலை சேர்ந்தவர் ராஜா (35). சினிமா நடனக் கலைஞர். இவரது மனைவி மீனா (25) துணை நடிகை. இவர்களுக்கு அஜீத் (8). ஆனந்த் (6). என்ற 2 மகன்கள் உள்ளனர்.

கடந்த ஏப்ரல் 24-ம் தேதி, மீனா மற்றும் சில துணை நடிகைகள் 3 மாத விசாவில் கலை நிகழ்ச்சிகள் நடத்த துபாய் சென்றனர். கலை நிகழ்ச்சியை முடித்துவிட்டு ஜூலை 22-ம் தேதி மீனா, சக துணை நடிகைகளுடன் பெங்களூர் வந்தார். பின்னர், அங்கிருந்து 23ம் தேதி காலை பயணிகள் விமானம் மூலம் சென்னை வந்தனர். விமான நிலையத்தில் மனைவியை அழைத்துச் செல்ல ராஜா காத்திருந்தார். ஆனால் மீனா வரவில்லை.

இதுகுறித்து, மீனம்பாக்கம் காவல் நிலையத்தில் ராஜா புகார் செய்தார். விமான நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து மீனாவை தேடி வந்தனர். அவரது செல்போன் எண்ணை கண்காணித்தனர். திருவான்மியூரில் ஒரு வீட்டில் கேரளாவைச் சேர்ந்த ரியாஸ் என்ற தொழிலதிபருடன் மீனா இருப்பது தெரியவந்தது. அங்கு போலீசார் சென்று விசாரித்தபோது தான் கடத்தப்படவில்லை என்றும், விருப்பப்பட்டுத்தான் ரியாசுடன் வந்ததாகவும் மீனா கூறினார். மேலும் ரியாசுடன் வாழ விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

அவரது மகன்கள் அஜீத், ஆனந்த் மற்றும் மீனாவின் தாய் விஷாலினி ஆகியோர் வந்து பார்த்து மீனாவிடம் பேசியதும் அவர் மனம் மாறினார். ரியாசை விட்டுவிட்டு கணவருடன் வாழ்வதற் சம்மதித்தார். இதையடுத்து, மீனாவுக்கு போலீசார் அறிவுரை கூறி கணவருடன் அனுப்பி வைத்தனர். திருமணமான பெண்ணை காதலிப்பது தவறு என்று ரியாசையும் போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.