ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேர் கரைதிரும்பவில்லை

ராமேஸ்வரம்: கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேர் கரைதிரும்பவில்லை. இதனிடையே அவர்கள் நால்வரையும் இலங்கை கடற்படையினர் கைது செய்ததாக தகவல் பரவியது. அவர்கள் 4 பேரும் சர்வதேச எல்லையில்
Published on
Updated on
1 min read

ராமேஸ்வரம்: கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேர் கரைதிரும்பவில்லை. இதனிடையே அவர்கள் நால்வரையும் இலங்கை கடற்படையினர் கைது செய்ததாக தகவல் பரவியது. அவர்கள் 4 பேரும் சர்வதேச எல்லையில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது இலங்கைக் கடற்படையினர் அவர்களைக் கைது செய்து தலைமன்னார் காவல்துறை வசம் ஒப்படைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்தத் தகவலால் ராமேஸ்வரம் மீனவர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.