2ஜி விவகாரத்தில் நாடாளுமன்றமே முன்கூட்டி தீர்ப்பளிக்கக்கூடாது: பிரதமர்

புதுதில்லி, ஜூலை.31: 2ஜி விவகாரத்தில் நீதிமன்றத்தில் விசாரணை முடியும் முன்னரே நாடாளுமன்றமே முன்கூட்டி தீர்ப்பளிக்கக்கூடாது என பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார். இந்த விவகாரம் நீதிமன்றத்தின்முன் உள்ளத
Published on
Updated on
1 min read

புதுதில்லி, ஜூலை.31: 2ஜி விவகாரத்தில் நீதிமன்றத்தில் விசாரணை முடியும் முன்னரே நாடாளுமன்றமே முன்கூட்டி தீர்ப்பளிக்கக்கூடாது என பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார்.

இந்த விவகாரம் நீதிமன்றத்தின்முன் உள்ளது. நீதிமன்றத்திடம் இந்த விவகாரத்தை விட வேண்டும். நாடாளுமன்றமே முன்கூட்டி தீர்ப்பளிக்கக்கூடாது என மன்மோகன் சிங் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

2ஜி விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் ராசா தெரிவித்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங், உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோர் மீது நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடரில் பாஜக போர்க்கணைகளை தொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் பிரதமர், உள்துறை அமைச்சரிடம் இருந்து விளக்கம் கோரியுள்ளது.

வலுவான லோக்பால் மசோதா கோரி ஆகஸ்ட் 16-ம் தேதி முதல் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அண்ணா ஹசாரே எச்சரிக்கை விடுத்துள்ளார். லோக்பால் மசோதாவின் நிலை குறித்தும் நாடாளுமன்றத்தில் முடிவெடுக்கப்பட உள்ளது.

லோக்பால் மசோதா குறித்து விவாதிக்க தயாராக உள்ளோம். லோக்பால் மசோதாவின் கதி நாடாளுமன்றத்தில் தீர்மானிக்கப்படும். ஜனநாயகத்தில் நாடாளுமன்றம் இறையாண்மை உள்ள அமைப்பு. அதை இயங்கவும், அதன் கடமையைச் செய்யவும் அனுமதிக்க வேண்டும் என்று பிரதமர் கேட்டுக்கொண்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.