கொச்சி, பிப். 11 : பாகிஸ்தானில் அச்சடிக்கப்படும் இந்திய கள்ள ரூபாய் நோட்டுக்கள் தற்போது இலங்கை வழியாக தமிழகத்திற்கும், கேரளாவிற்கும் வருகிறது. இதனால், கள்ள நோட்டு கும்பல் தங்களது முகாமை பங்களாதேஷில் இருந்து இலங்கைக்கு இடமாற்றம் செய்திருப்பது தெரிய வந்துள்ளதாக என்ஐஏ என்றழைக்கப்படும் தேசிய கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்தியாவின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் வகையில் கள்ளநோட்டுக்களை பாகிஸ்தான் புழக்கத்தில்விட்டு வருகிறது. முதலில் கள்ள நோட்டுக்கள் பங்களாதேஷ் எல்லை வழியாக இந்தியாவிற்குள் ஊடுருவியது. ஆனால் தற்போது இலங்கையில் இருந்து தமிழகத்திற்கும், கேரளாவிற்கும் மிக எளிதாக வந்துகொண்டிருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.