பாரமுல்லா, பிப். 11 : பாரமுல்லா மாவட்டத்தில் 22 வயது இளைஞரை தீவிரவாதி என்று தவறாக நினைத்து ராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர். ராணுவத்தின் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ரஃபியாபாத் பகுதியில் நேற்று இரவு 9 மணியளவில் தனது வீட்டு வாயிலில் நின்று கொண்டிருந்த ஆஷிக் ஹுசைன் என்ற இளைஞரை ராணுவத்தினர் தீவிரவாதி என்று நினைத்து சுட்டுவிட்டனர். இன்று அதிகாலையில்தான் அவர் அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர் என்பது தெரிய வந்துள்ளது.