ஏற்காடு, பிப்.11: ஏற்காடு குப்பனூர் சோதனைச்சாவடி அருகே மஞ்சவாடி வனப்பகுதியில் பாதி எரிந்த நிலையில் பெண் பிணம் ஒன்று இருப்பது சோதனையில் தெரியவந்தது. இதை அடுத்து, வனச்சரகர் சிவகுமார் தெரிவித்த புகாரின் அடிப்படையில் ஏற்காடு இன்ஸ்பெக்டர் முகமது அபிபுல்லா தலைமையில் அந்தப் பகுதியில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அந்தப் பெண் பிணம் பாதி எலும்புக்கூடாகவும், தலை முடி மட்டும் எரியாமலும் இருந்துள்ளது. இந்தப் பெண் அரைகுறையாக எரிக்கப்பட்டு அனேகமாக ஒரு மாதம் ஆகியிருக்கும் என்றும், பிணத்தின் அருகே செல்போன் ஒன்றும் தாவணி ஒன்றும் இருந்துள்ளது என்று போலீஸார் தெரிவித்தனர்.