சென்னை, பிப். 11 : தேசிய முற்போக்கு திராவிட கழகத் தலைவர் விஜயகாந்த், அக்கட்சியின் கொடிநாள் சம்பந்தமான அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
அறிக்கையில், பிப்ரவரி 12ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தே.மு.தி.க.வின் கொடி நாளாகும். இன்றைய இளைய தலைமுறை கண்டெடுத்த இந்த இயக்கத்தின் கொடிதான் ஏழை, எளிய மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாகும். இந்த கொடி நிழலில் ஊழலையும், வறுமையையும் ஒழிக்க எல்லோருக்கும் சமச்சீர் கல்வி, வேலை வாய்ப்பும், சுகாதாரமும் கிடைக்கச் செய்யவும் நாம் ஒன்று கூடும் நாள்தான் கொடி நாளாகும். இந்நாளில் இயன்றதைச் செய்வோம், இல்லாதவர்க்கே என்ற சூளுரையோடு கழக நிர்வாகிகளும், மகளிர் அணியினரும், இதர அணியைச் சேர்ந்த தோழர்களும் ஆங்காங்கே கழகக் கொடியினை ஏற்றி இனிப்புகள் வழங்கி, தங்களால் இயன்ற உதவிகளை ஏழை மக்களுக்கு செய்து மக்கள் ஆதரவோடு சிறப்பாக கொண்டாட வேண்டுமென்று கேட்டுக் கொள்ளுகிறேன் என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.