மும்பை, பிப். 11 : நடிகர் அமிதாப் பச்சனிற்கு வயிற்றில் ஏற்பட்டுள்ள பிரச்சினை காரணமாக அவருக்கு மரோலில் உள்ள செவன் ஹில்ஸ் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது. 1982ம் ஆண்டு கூலி படத்தில் நடிக்கும் போது ஏற்பட்ட விபத்தில் அமிதாப்பிற்கு வயிற்றுப்பகுதியில் காயம் ஏற்பட்டு அதன் விளைவாக சில உடல் உபாதைகள் ஏற்பட்டன. அதற்கு தீர்வாக இந்த அறுவை சிகிச்சை அமையும் என்றும், ரசிகர்களின் பிரார்த்தனையும் விருப்பமும் அதற்கு அவசியம் என்றும் அமிதாப் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.