திருவள்ளூர், பிப். 11: திருவள்ளூர் அரசு பஸ் நடத்துனர் திடீர் மாரடைப்பால் இறந்தார்.
சென்னை தேனாம்பேட்டை வீட்டுவசதி வாரியக்குடியிருப்பைச் சேர்ந்த நடராஜன் (56).
இவர் திருவள்ளூர் அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் நடத்துனராக வேலை செய்து வந்தார். இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு பணி முடிந்து ஸ்ரீபெரும்புதூரில் உள்ள நண்பர் ராஜேந்திரன் வீட்டுக்கு செல்வதற்காக பணிமனையில் இருந்து வெளியே வந்தார்.
அப்போது திடீரென மயங்கி கீழே விழுந்த அவரை திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் மாரடைப்பால் இறந்து விட்டார் எனத்தெரிவித்தனர்.
இதுதொடர்பாக திருவள்ளூர் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.