புதுடெல்லி, பிப். 11 : மிகக் கொடூரமாக தாக்கப்பட்டு சுய நினைவை இழந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பலக் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முக்கியக் குற்றவாளி ராஜ்குமாரை, டெல்லி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ராஜ்குமாரிடம் விசாரணை நடத்தினால், பலக், எங்கு, எவ்வாறு இவ்வாறு கொடூரமாக தாக்கப்பட்டார் என்ற விவரம் தெரிய வரும் என்று டெல்லி காவல்துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.