புதுடெல்லி, பிப். 11 : இந்தியாவின் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி, இந்தியா - சௌதி அரேபியா பாதுகாப்புத் துறைகளுக்கு இடையே ஏற்பட உள்ள ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த இரண்டு நாள் பயணமாக பிப்ரவரி 13ம் தேதி ரியாத் செல்கிறார். இதுதான் பாதுகாப்புத் துறை அமைச்சர் சௌதி அரேபியாவிற்குச் செல்லும் முதல் பயணம் என்று பாதுகாப்புத் துறை அலுவலகம் கூறியுள்ளது.