தற்போதைய செய்திகள்
மதுரையில் விஜயகாந்த் முகாம்: கட்சியினரை சந்திக்க அனுமதி மறுப்பு
மதுரை, பிப்.11: தேமுதிக தலைவர் விஜயகாந்த் மதுரையில் முகாமிட்டுள்ளார். இன்று காலை விமானம் மூலம் மதுரை வந்த அவர், மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள நண்பரின் வீட்டில் தங்கியுள்ளார். விஜயகாந்தைக் காண கட்சி
மதுரை, பிப்.11: தேமுதிக தலைவர் விஜயகாந்த் மதுரையில் முகாமிட்டுள்ளார். இன்று காலை விமானம் மூலம் மதுரை வந்த அவர், மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள நண்பரின் வீட்டில் தங்கியுள்ளார். விஜயகாந்தைக் காண கட்சியினர் அதிகம் பேர் திரண்டனர். ஆனால் அவர் யாரையும் தன்னைச் சந்திக்க அனுமதிக்க வில்லை. முக்கியப் பொறுப்பாளர்கள் இருவர் மட்டும் அவரை சந்தித்து சற்று நேரம் பேசினர். ஆனால் அவர்களையும் உடனே திருப்பி அனுப்பிவிட்டார்.
நாளை அருப்புக்கோட்டையில் நடைபெறும் கட்சிப் பொறுப்பாளரின் இல்லத் திருமண நிகழ்ச்சியில் விஜயகாந்த் கலந்துகொள்கிறார்.