பெங்களூரூ, பிப். 11 : பெங்களூரூவில் நடைபெற்ற ஆரோக்கிய கண்காட்சி 2012 நிகழ்ச்சியைத் துவக்கி வைத்த கர்நாடக முதலமைச்சர் சதானந்த கௌடா, யோகக் கலை என்பது உலகத்திற்கு இந்தியா கொடுத்த பரிசு என்று குறிப்பிட்டார். மேலும், இந்த யோகக் கலையை இந்தியர்களும் தொடர்ந்து செய்து ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.