ரூ.5 லட்சம் வரை வருமான வரி உச்சவரம்பு - நிலைக் குழு பரிந்துரை

2012-13ம் நிதிநிலை அறிக்கையில் தனி நபரின் வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட பரிந்துரை...
Published on
Updated on
1 min read

புதுடெல்லி, பிப். 11 : 2012-13ம் நிதிநிலை அறிக்கையில் தனி நபரின் வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக நிலைக்குழு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

பாஜக தலைவர் யஷ்வந்த் சின்ஹா தலைமையில் அமைக்கப்பட்டுள்ள நிதிக்கான நாடாளுமன்ற நிலைக் குழுவின் பரிந்துரையில், தனி நபர் வருமான வரி உச்சவரம்பை தற்போதுள்ள ரூ.1.80 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆண்டுக்கு ரூ. 5 லட்சத்தில் இருந்து 8 லட்சம் வரை வருமானம் பெறுவோர் வெறும் 10 சதவீத வரியையும், 8ல் இருந்து ரூ.20 லட்சம் வரை சம்பாதிப்போர் 20 சதவீத வரியையும் செலுத்தும் வகையில் பரிந்துரையில் கூறப்பட்டுள்ளது. 30 லட்சம் சம்பாதிப்போர் 30 சதவீத வரியை செலுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது என குழு உறுப்பினர்கள் தெரிவித்துள்ளர்.

தற்போது 5 லட்சம் சம்பாதிப்போர் 10 சதவீதமும், 8 லட்ச ரூபாய் சம்பாதிப்போர் 20 லட்சமும், 8 லட்சத்திற்கு மேல் சம்பாதிப்பவர்கள் 30 சதவீதமும் வரி செலுத்துகின்றனர்.

இந்த புதிய முறை நடைமுறைக்கு வந்தால், ஒவ்வொருவரும் தாங்கள் செலுத்தும் வரித் தொகையில் பாதி அளவிற்கே வரி செலுத்த வேண்டிய நிலை ஏற்படும். மிக அதிகமாக சம்பாதிப்பவர்களுக்கு இன்னும் அதிகளவில் வரி குறையும் வாய்ப்பு ஏற்படுகிறது.

எப்போதும் போல மகளிருக்கு தனி வரி விதிப்பு முறையை கடைபிடிக்கவும், மத ரீதியான அறக்கட்டளை மற்றும் அமைப்புகளுக்கு சொத்துவரை நீக்கவும் பரிந்துரையில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com