Enable Javscript for better performance
கடலுக்கு எல்லை பிரிப்பதை எதிர்த்து நாகை மீனவர்கள் வேலை நிறுத்தம்- Dinamani

சுடச்சுட

    

    கடலுக்கு எல்லை பிரிப்பதை எதிர்த்து நாகை மீனவர்கள் வேலை நிறுத்தம்

    By ஷங்கர்  |   Published on : 29th December 2012 02:03 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாகை வட்ட மீனவ கிராம மீனவர்கள் இன்று முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ளனர்.

    இன்று காலை நாகை வட்ட மீனவ பஞ்சாயத்தார் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், கடலுக்கு எல்லை வகுத்து மீன்பிடி தொழிலை முடக்கக் கூடாது. மீன் பிடிக்கும் அனைத்து இடங்களிலும் மீனவர்களுக்கு உரிமை உள்ளது.

    தமிழக மீனவர்கள் மீது, இலங்கை கடற்படையினரின் அத்துமீறும் செயலுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.

    இதற்கு மத்திய, மாநில அரசுகள் நிரந்தர தீர்வு காணும் வரை தொடர் வேலை நிறுத்தம் இன்று முதல் நடத்தப்படும் என்று முடிவெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது.

    நாகை வட்ட மீனவக் கிராமங்களில் 8 கிராமங்கள் அடக்கம். சுமார் 600க்கும் மேற்பட்ட விசைப் படகுகள், 2000க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai