சுடச்சுட

  

  இந்தியாவுக்கான நிதியுதவி நிறுத்தப்படும்: பிரிட்டன் தகவல்

  Published on : 09th November 2012 06:01 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  இந்தியாவுக்கு வழங்கப்படும் நிதியுதவி வரும் 2015ம் ஆண்டோடு முற்றிலும் நிறுத்தப்படும் என்று யுனைட்டட் கிங்க்டம் - இங்கிலாந்து தெரிவித்துள்ளது. வரும் 2013ஆம் ஆண்டில் இருந்து 2015ம் ஆண்டு வரை இந்தியாவுக்கு வழங்கப்படும் உதவிகள் படிப்படியாகக் குறைக்கப்படும். பின்னர் 2015ம் ஆண்டுடன் நிதியுதவி முற்றிலும் நிறுத்தப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

  தற்போது இந்தியாவுக்கு 319 மில்லியன் பவுண்ட் அளவுக்கு இந்தியாவுக்கு அந்நாடு வழங்குகிறது. இது அடுத்த இரண்டு ஆண்டுக்குள் 200 மில்லியன் பவுண்டு ஆக குறைக்கப்படும் என்று சர்வதேச வளர்ச்சி துறைக்கான அமைச்சர் ஜஸ்டின் க்ரீனிங் தகவல் வெளியிட்டுள்ளார்.

  இந்தியப் பொருளாதார வளர்ச்சி அதிகமாக இருப்பதால், நிதியுதவி கொடுப்பது தேவையற்றது என்று பலரும் அந்நாட்டில் கூறி வருகின்றனர். ஆனால், ஆப்பிரிக்காவில் வசிக்கும் ஏழைகளைக் காட்டிலும், இந்தியாவில் 9 மாநிலங்களில் வசிக்கும் ஏழைகள் அதிகம் என்று சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.

  இந்நிலையில், இந்தியாவுக்கு இந்த வருடத்தின் துவக்கத்தில் வந்திருந்த க்ரீனிங், இந்தியா பல்வேறு துறைகளில் முன்னேறியுள்ளது என்று கூறினார். எனவே நிதியுதவி என்பதற்குப் பதிலாக, தொழில்நுட்ப உதவிகளை அளிப்பதே சிறந்ததாக இருக்கும் என்று கருத்து தெரிவித்தார்.

  உண்மையில், இந்திய அரசுக்கு நேரடியாக பிரிட்டன் நிதியுதவிகளைக் கொடுப்பதில்லை, தன்னார்வ நிறுவனங்கள், மாநில அரசின் சில திட்டங்கள் ஆகியவற்றுக்கே வழங்கப்படுகிறது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai