Enable Javscript for better performance
2014 தேர்தலுக்கு தயார்: காங்கிரஸில் ராகுலுக்கு புதிய பதவி- Dinamani

சுடச்சுட

    

    2014 தேர்தலுக்கு தயார்: காங்கிரஸில் ராகுலுக்கு புதிய பதவி

    By தினமணி  |   Published on : 15th November 2012 11:34 PM  |   அ+அ அ-   |    |  

    Rahul-Gandhi

    2014-ம் ஆண்டு பொதுத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், அக்கட்சியின் பொதுச் செயலர் ராகுலுக்கு புதிய பதவி கட்சியில் கொடுக்கப்பட்டுள்ளது.

    ராகுல் தற்போது, தேர்தல் ஒருங்கிணைப்பு பணிக்குழுத் தலைவராக கட்சியினால் அறிவிக்கப்பட்டுள்ளார். இதன்மூலம், 2014ம் ஆண்டுத் தேர்தலை ராகுல் தலைமையில் காங்கிரஸ் கட்சி எதிர்கொள்ளவுள்ளது. கட்சியின் இந்த நடவடிக்கை இளைஞர்களை அதிகம் கவர்ந்திழுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தேர்தல் பிரசார ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பொறுப்பை, ராகுலுக்கு வழங்கியுள்ள காங். மேலிடத்தின் செயலை காங்கிரஸ் தலைவர்கள் வரவேற்றுள்ளனர். மேலும், காங்கிரஸின் மூத்த தலைவர்களான அஹமத் படேல், திக்விஜய் சிங், ஜய்ராம் ரமேஷ் உள்ளிட்டோர், ராகுலுடன் இணைந்து பணியாற்றும் வகையில், தேர்தல் துணைக் குழுக்கள் 2 அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழு பிரசாரம், விளம்பரம் உள்ளிட்டவற்றை கவனிக்கும். பிரசாரக் குழுவில், அம்பிகா சோனி, திக்விஜய் சிங், ஜ்யோதிர் ஆதித்யா சிந்தியா, மனீஷ் திவாரி உள்ளிட்டோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    கூட்டணி குறித்து இறுதி செய்வதற்கும், 2014ம் ஆண்டு தேர்தலை கூட்டணிக் கட்சிகளை ஒருங்கிணைத்து மேற்கொள்வதற்கும் இந்தக் குழு முயற்சி செய்யும்.

    ஏ.கே. அந்தோனி தலைமையிலான ஒருதுணைக்குழுவில், எம்.வீரப்ப மொய்லி, ஏ.கே அந்தோனி, ஜிதேந்தர் சிங், சுரேஷ் பச்சோரி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். இந்தக் குழு, தேர்தலுக்கு முந்தைய கூட்டணி குறித்த விவகாரங்களைக் கையாளும்.

    இந்தத் தேர்தலில் காங். வெற்றி பெற்றால் ராகுல் பிரதமராகும் வாய்ப்பு உள்ளது என்பது காங்கிரஸ் வட்டாரத்தில் பரவலாக நிலவும் கருத்து.

    kattana sevai