சட்டத்துறையில் இந்திய மொழி: தன்னார்வ அமைப்புகளுக்கு நிதியுதவி

சட்டம் தொடர்பான துறைகளில் இந்திய மொழிகளைப் பயன்படுத்தும் தன்னார்வ அமைப்புகளுக்கு நிதியுதவி அளிக்க மத்திய அரசு அறிவித்துள்ளது.

சட்டம் தொடர்பான துறைகளில் இந்திய மொழிகளைப் பயன்படுத்தும் தன்னார்வ அமைப்புகளுக்கு நிதியுதவி அளிக்க மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில், இந்திய அரசமைப்பில் சொல்லப்பட்டுள்ள மொழி எதிலும் புத்தகங்களை தயாரித்தல், வெளியிடுதல் போன்ற பணி எதனையும் புரிந்து வருகிற அமைப்புகளுக்கு மானியம் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

இதற்கு, தகுதி வாய்ந்தவர்கள் www.lawmim.nic.in/olwing  என்ற இணையதளம் மூலமாகவும், இணைச் செயலாளர் மற்றும் சட்ட ஆலோசகர், சட்டம் மற்றும் நீதி அமைச்சகம், சட்டமியற்றுத்துறை, ஆட்சி மொழிப் பிரிவு, புது தில்லி என்ற முகவரிக்கு அனுப்பியும், அக்டோபர் 25ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விவரங்கள் அறிய 011-23386229  எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com