Enable Javscript for better performance
டெங்கு காய்ச்சல்: அமைச்சர் குலாம் நபி ஆசாத் இன்று ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    டெங்கு காய்ச்சல்: அமைச்சர் குலாம் நபி ஆசாத் இன்று ஆய்வு

    By தினமணி  |   Published on : 12th October 2012 06:25 AM  |   அ+அ அ-   |    |  

    AZAD

    தமிழகம், புதுவை உள்பட தென் மாநிலங்களில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்கும் வகையில் விரிவான ஆய்வுக் கூட்டம் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் தலைமையில் சென்னையில் இன்று நடைபெறுகிறது.

    சென்னை கிண்டியில் அண்மையில் திறக்கப்பட்டுள்ள "ஐடிசி சோழா' ஹோட்டலில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு, ஆந்திரம், கேரளம், கர்நாடகம், புதுவை ஆகியவற்றைச் சேர்ந்த சுகாதாரத் துறை அமைச்சர்களும், சுகாதாரத் துறை செயலர்களும் கலந்து கொள்கின்றனர். மத்திய அரசின் சுகாதாரத் துறை செயலர் பி.கே.பிரதானும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.

    தமிழகத்தைப் பொருத்தவரை சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் வி.எஸ்.விஜய், சுகாதாரத் துறை செயலர் ஜே.ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரத் துறை இயக்குநர் பொற்கை பாண்டியன், ஊரக மருத்துவப் பணிகள் துறை இயக்குநர் (டிஎம்எஸ்) பரஞ்சோதி, மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் சி.வம்சதாரா உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

    இந்த ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொள்ள நேற்று இரவு மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் சென்னை வந்தார்.

    டெங்கு காய்ச்சல் உள்பட வைரஸ் காய்ச்சல்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை தமிழகம் உள்ளிட்ட மாநில அரசுகள் தீவிரமாகக் கடைப்பிடிக்க வலியுறுத்தும் வகையில் இந்த ஆய்வுக் கூட்டம் நடத்தப்படுவதாக அவர் கூறினார்.

    kattana sevai