Enable Javscript for better performance
பிரதமர் \\\'ரேஸி’ல் நரேந்திர மோடி: இங்கிலாந்தைத் தொடர்ந்து அமெரிக்காவும் பச்சைக்கொடி!- Dinamani

சுடச்சுட

    

    பிரதமர் 'ரேஸி’ல் நரேந்திர மோடி: இங்கிலாந்தைத் தொடர்ந்து அமெரிக்காவும் பச்சைக்கொடி!

    By தினமணி  |   Published on : 12th October 2012 09:41 PM  |   அ+அ அ-   |    |  

    குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு அமெரிக்க பயணம் மேற்கொள்வதற்கான விசா வழங்குவதில் எந்தத் தடையும் இல்லை என்று அமெரிக்கா கூறியுள்ளது. இது, நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராவதற்கான வாய்ப்பு உள்ளதால், தனது நிலையை மாற்றிக் கொண்டுள்ளது அமெரிக்கா என்பதையே காட்டுகிறது.

    முன்னதாக, பிரிட்டன் அரசும் குஜராத் அரசின் வளர்ச்சியைப் புகழ்ந்துள்ளதுடன், குஜராத் அரசுடன் வர்த்தக நடைமுறைகளை மேற்கொள்ளவும் விருப்பம் தெரிவித்தது. மேலும், நரேந்திர மோடியின் நிர்வாகத் திறனைப் புகழ்ந்த பிரிட்டன், இந்தியாவுக்கான தனது நாட்டுத் தூதர் ஜேம்ஸ் பீவானை குஜாராத்துக்குச் செல்லுமாறும், மோடியைச் சந்தித்துப் பேசுமாறும் அறிவுறுத்தியுள்ளது.

    இத்தகைய சூழ்நிலையில், அமெரிக்கா மோடிக்கு விசா வழங்குவதில் உள்ள தடையைத் தளர்த்தவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    kattana sevai