Enable Javscript for better performance
அந்தமான் தீவருகே புதிய காற்றழுத்த தாழ்வு நிலை - Dinamani

சுடச்சுட

    

    அந்தமான் தீவருகே புதிய காற்றழுத்த தாழ்வு நிலை

    By dn  |   Published on : 25th October 2012 02:43 PM  |   அ+அ அ-   |    |  

    வடக்கு அந்தமான் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளதால், தமிழகத்தில் மீண்டும் மழை பெய்யும் வாய்ப்பு

    உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    இது குறித்து வானிலை ஆய்வு மைய இயக்குநர் கூறுகையில், வடக்கு அந்தமான் அருகே கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை அங்கேயே நிலை கொண்டுள்ளது. இதனால் தமிழகத்தில் மீண்டும் மழை பெய்யும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

    இது தமிழகத்தை நோக்கி நகர்வதால் மழை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    மேலும், முன்னதாக வங்கக்கடலில் உருவாகி அரபிக் கடலுக்கு நகர்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தீவிரம் அடைந்து புயல் சின்னமாக உருவெடுத்து ஆப்ரிக்க நாடுகளைத் தாக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இது நாளை சோமாலியாக அருகே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

    kattana sevai