Enable Javscript for better performance
அணையை நிரப்ப சிறுநீரா கழிக்க முடியும்?: சர்ச்சைக் கருத்துக்கு அஜீத்பவார் மன்னிப்பு கோரினார்- Dinamani

சுடச்சுட

    

    அணையை நிரப்ப சிறுநீரா கழிக்க முடியும்?: சர்ச்சைக் கருத்துக்கு அஜீத்பவார் மன்னிப்பு கோரினார்

    Published on : 08th April 2013 10:49 AM  |   அ+அ அ-   |    |  

    மகாராஷ்டிர மாநில அணைகளில் நீர் இல்லை. அங்கே கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்த நிலையில், தனது வயலுக்கு நீர் தேவை என விவசாயி ஒருவர் போராட்டம் நடத்தி வருகிறார். இரண்டாவது மாதமாகத் தொடர்ந்துள்ள அவரது போராட்டம் குறித்தும், அணைகளில் நீர் இல்லாத நிலை குறித்தும் கருத்து கூறிய மகாராஷ்டிர துணை முதல்வர் அஜீத் பவார், அணைகளில் நீர் இல்லை. நாம் எங்கிருந்து தண்ணீர் பெற முடியும்? அணையில் நாம் என்ன சிறுநீர் கழிக்கவா முடியும்? குடிக்க போதுமான தண்ணீர் இல்லாமல் என்னால் எளிதாக சிறுநீர்கூடக் கழிக்க முடியவில்லை என்று கருத்து கூறியிருந்தார்.

    அவரின் இந்தக் கருத்துக்கு கடும் கண்டனங்கள் எழுந்தன.

    தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இவர், அக்கட்சித் தலைவரும், மத்திய அமைச்சருமான சரத்பவாரின் உறவினர்.

    அஜீத் பவாரின் இந்தக் கருத்துக்கு பா.ஜ.க, கடும் கண்டனம் தெரிவித்தது. "அவர் உடனடியாக பதவி விலக வேண்டும். நாகரிகம் இல்லாமல் ஒரு முக்கியப் பொறுப்பில் உள்ளவர் இவ்வாறு கருத்துக்கள் கூறுவது தவறு. இது மகாராஷ்டிர அரசியலில் மிகவும் கீழ்த் தரமானதாக உள்ளது” என்று அறிக்கையில் கூறியுள்ளது.

    சிவசேனா கட்சியும், அஜித் பவார் பதவி விலக வேண்டும். அவருக்கு தண்டனை வழங்க வேண்டும். இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் எழுப்புவோம் எனக் கூறியது.

    இந்நிலையில், தனது கருத்து யாருடைய மனதையாவது புண்படுத்தியிருந்தால், அதற்காக தான் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக அஜீத் பவார் கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai