Enable Javscript for better performance
சௌலி மடத்தின் இளைய மடாதிபதிகள் மூவர் தீக்குளித்து சாவு- Dinamani

சுடச்சுட

    

    சௌலி மடத்தின் இளைய மடாதிபதிகள் மூவர் தீக்குளித்து சாவு

    By KKEYAN  |   Published on : 08th April 2013 06:10 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தீக்குளித்து சௌலி மடத்தின் இளைய மடாதிபதிகள் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

    பீதர் புறநகர் பகுதியில் உள்ளது சௌலி மடம். இந்த மடத்தின் தலைமை மடாதிபதியாக கணேஷ்வர்சுவாமிகள் இருந்தார். அவர் கடந்த பிப். 28-ம் தேதி ஜீவசமாதி அடைந்தார். இதனால் மனவருந்திய நிலையில் இருந்த அவரது சீடர்களான இளைய மடாதிபதிகள், ஜெகநாத் (22), பிரணாப் (16), வீராரெட்டி (49) ஆகியோர் இன்று காலை 5 மணியளவில் மடத்தில் இருந்த குடில் ஒன்றில் விறகை அடுக்கி வைத்து, தீக்குளித்து உயிரிழந்துள்ளனர்.  தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று குடிலில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். பின்னர் 3 பேரின் சடலங்களை போலீஸார் மீட்டனர்.

    முன்னதாக அவர்கள் எழுதி வைத்திருந்த கடிதத்தில், எங்களின் குரு ஜீவசமாதி அடைந்த பிறகு அவருக்கு சேவை செய்யாமல் இருப்பது மனவருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் தீக்குளித்து உயிரிழக்க முடிவு செய்துள்ளோம். எங்களுக்கு யாரும் தொந்தரவோ, கெடுதலோ செய்யவில்லை. எங்கள் சாவிற்கு யாரும் காரணமல்ல என்று எழுதி வைத்துள்ளனர். ஜீவ சமாதி அடைந்த கணேஷ்வர்சுவாமிகள், உயிருடன் இருந்தப்போது, நான் இறந்த பிறகு கைலாசத்தில் என்னுடன் இணைய வேண்டுமானால் கட்டையை அடுக்கி தீக்குளித்து இறக்கலாம் என்று தெரிவித்ததாகவும் கடிதத்தில் எழுதியுள்ளனர்.

    பிரேத பரிசோதனைக்கு பிறகு இறந்தவர்களின் 3 பேரின் உடல்களும் மடத்தின் ஒரு பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது. இளைய மடாதிபதிகள் 3 பேர் தீக்குளித்து இறந்ததற்கு கர்நாடக முதல்வர் ஜெகதீஷ்ஷெட்டர் இரங்கல் தெரிவித்துள்ளார். சௌலி மடத்தின் இளைய மடாதிபதிகள் 3 பேர் தீக்குளித்து உயிரிழந்துள்ளது மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai