சுடச்சுட

  
  thatchar

  பிரிட்டன் முன்னாள் பிரதமர் மார்க்ரெட் தாட்சர் இன்று காலமானார். அவருக்கு வயது 87. இவர் சமீபகாலமாக உடல் நலம் சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்தார்.

  அவர் 1979ல் இருந்து 1990 வரை 12 வருடங்கள் தொடர்ச்சியாக பிரிட்டன் பிரதமராக இருந்துள்ளார். 19ம் நூற்றாண்டுக்குப் பிறகு இவரைப் போல் தொடர்ச்சியாக எவரும் இத்தனை ஆண்டுகாலம் பிரிட்டனின் பிரதமராக இருந்ததில்லை. பிரிட்டனின் இரும்புப் பெண்மணி என்ற புகழாரத்துடன் திகழ்ந்தவர்.

  அவர் தனது வாரிசுகளான மார்க் தாட்சர், கரோல் தாட்சர் ஆகியோருடனும், பேரக் குழந்தைகளுடன் வாழ்ந்துவந்தார். அண்மைக்காலமாக அவர் வெளியிடங்களில் பொதுக் கூட்டங்களில் கலந்துகொள்வதைத் தவிர்த்து வந்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai