சுடச்சுட

  

  காமன்வெல்த் மாநாட்டில் இருந்து இலங்கையை நீக்க காமன்வெல்த் சட்ட மாநாட்டில் தீர்மானம்

  Published on : 18th April 2013 12:12 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  Commonwealth

  காமன்வெல்த் மாநாட்டில் இருந்து இலங்கையை நீக்க வேண்டும் என்று, காமன்வெல்த் அமைப்பின் சட்ட வல்லுநர் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவின் கேப்டவுன் நகரில் நடைபெற்ற காமன்வெல்த் அமைப்பின் 18 வது சட்ட வல்லுநர் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

  இங்கிலாந்து, வேல்ஸ் ஆகியவற்றின் சட்ட வல்லுநர் சங்கம், காமன்வெல்த் அமைப்பில் இருந்து இலங்கையை நீக்க வேண்டும் என்று கோரியுள்ளன.

  இது, சர்வதேச அளவிலான தீர்மானத்துக்கு வலு சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது என்று கூறப்படுகிறது.

  காமன்வெல்த் அமைப்பின் வழக்குரைஞர் சங்க மாநாட்டில், காமன்வெல்த் சட்டக் கல்வி கூட்டமைப்பு, காமன்வெல்த் மேஜித்ரேட் மற்றும் நீதிபதிகள் அமைப்பு ஆகியவையும் பங்கேற்று தீர்மானத்தை தாக்கல் செய்தன.

  இந்தத் தீர்மானத்தில், வன்முறைகள் மற்றும் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய இலங்கையை, காமன்வெல்த் நாடுகளின் அமைப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

  மேலும் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் நிறைந்த நாட்டில் காமன்வெல்த் நாடுகளின் மாநாட்டை நடத்துவது, காமன்வெல்த் அமைப்பின் கொள்கைகள் மற்றும் கட்டுப்பாடுகள் தொடர்பில் கேள்வி எழுப்படும் தன்மையை ஏற்படுத்தும் என்றும், எனவே வரும் நவம்பர் மாதம் இலங்கையில் நடத்தப்படவுள்ள காமன்வெல்த் நாடுகளின் மாநாட்டை வேறு நாட்டில் நடத்துவது தொடர்பாக காமன்வெல்த் நாடுகளின் கூட்டமைப்பு யோசிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

  மேலும், வரும் ஏப்ரல் 26ம் தேதி நடைபெறும் காமன்வெல்த் அமைச்சர்களின் செயற்குழுக் கூட்டத்தில், இலங்கை விவகாரம் தொடர்பாக ஆலோசிக்கப்பட வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai