Enable Javscript for better performance
எம்.ஜி.ஆரின் ராமாவரம் இல்லம் நினைவு இல்லமாக மாறுமா? - Dinamani

சுடச்சுட

    

    எம்.ஜி.ஆரின் ராமாவரம் இல்லம் நினைவு இல்லமாக மாறுமா?

    By எம்.சரவணன்  |   Published on : 25th April 2013 04:18 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் வசித்த ராமாவரம் இல்லத்தை அவரது நினைவு இல்லமாக மாற்றும் எண்ணம் இல்லை என்று மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்தார்.

    சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற சுற்றுலா மற்றும் கலை, பண்பாட்டுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது குறுக்கிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் கே. பாலபாரதி (திண்டுக்கல்), முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். வசித்த ராமாவரம் இல்லம், பொதுமக்கள் பார்வையிடும் வகையில் நினைவு இல்லமாக மாற்றப்படுமா என்று கேள்வி எழுப்பினார்.

    அவருக்குப் பதிலளித்த மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், எம்.ஜி.ஆர். எழுதிய உயிலின்படி ராமாவரம் இல்லத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. தியாகராய நகர் ஆற்காடு தெருவில் எம்.ஜி.ஆர். வசித்த இல்லம் நினைவில்லமாக பராமரிக்கப்பட்டு வருகிறது. முதல்வர் ஜெயலலிதாவின் முயற்சியால் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிடம் சிறப்பாக மேம்படுத்தப்பட்டு பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai