சுடச்சுட

  

  ஆதி திராவிட கிறிஸ்தவர்களை எஸ்.சி பட்டியலில் சேர்க்கக் கோரி முதல்வர் கடிதம்

  By dn  |   Published on : 09th August 2013 10:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  jaya

  ஆதி திராவிட கிறிஸ்தவர்களை எஸ்.சி./எஸ்.டி. பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

  இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், ஆதி திராவிட கிறிஸ்தவர்களை தாழ்த்தப்பட்ட / பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் சேர்க்க வலியுறுத்தி கடந்த 1995ஆம் ஆண்டே நான் உங்களுக்கு கடிதம் எழுதியிருந்தேன். அதேக் கோரிக்கையை தான் தற்போதும் வலியுறுத்துகிறேன்.

  தமிழகத்தில், பிற்படுத்தப்பட்டவர்களுக்கும், தாழ்த்தப்பட்டவர்களுக்கும்  ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

  தற்போது எஸ்சி பிரிவில் இந்து, சிக்கிம், புத்த சமயத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே பயன்பெற்று வருகின்றனர். கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர்கள் சேர்க்கப்படவில்லை. எனவே, ஆதி திராவிட கிறிஸ்தவர்களையும் தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும்.

  இது குறித்த மசோதா தற்போது நடந்து வரும் மழைக்காலக் கூட்டத் தொடரிலேயே நிறைவேற்றப்பட வேண்டும். இதன் மூலம், தமிழகத்தில் உள்ள ஆதி திராவிட கிறிஸ்தவர்கள், எஸ்.சி. பிரிவினருக்கு தமிழக அரசு அளிக்கும் பல்வேறு நலத்திட்டங்களைப் பெற முடியும்.

  இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai