சுடச்சுட

  

  வாகன தணிக்கையின் போது விபத்தில் காயமுற்று சிகிச்சை பெற்று வந்த சப்-இன்ஸ்பெக்டர் மரணம்

  By ஜி.சுந்தர்ராஜன்  |   Published on : 30th August 2013 08:05 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சிதம்பரத்தில் கடந்த ஆக.25-ம் தேதி இரவு வாகன தணிக்கையின் போது மோட்டார் சைக்கிள் மோதியதில் கால்முறிவு ஏற்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் வெள்ளிக்கிழமை மரணமடைந்தார்.

  சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றுபவர் அன்பழகன். இவர் கடந்த ஆக.25-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு எஸ்.பி.கோயில்தெருவில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் உசூப்பூரைச் சேர்ந்த அருண்ராஜ் (22), விமல்குமார் (21), முத்துக்குமார் (21), தினகர் (22) ஆகிய நால்வர் வந்துள்ளனர். சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் மோட்டார் சைக்கிளை நிறுத்த சொல்லும் போது, நிறுத்தாமல் அவர் மீது மோதி கீழே விழுந்தனர். இதில் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகனுக்கு கால்முறிவு ஏற்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் வெள்ளிக்கிழமை காலை மாரடைப்பில் இறந்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai