வடகொரியாவில் பாப் பாடகி உட்பட 12 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
By dn | Published On : 30th August 2013 02:04 PM | Last Updated : 30th August 2013 02:04 PM | அ+அ அ- |

வடகொரியாவில் ஆபாச நடனமாடி, அதனை சிடிக்களாக விற்பனை செய்த பாப் பாடகி மற்றும் அவரது குழுவில் இடம்பெற்ற 11 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
உன்னாஸ் ஆர்கெஸ்ட்ரா என்ற இசைக் குழுவை நடத்தி வரும் ஹயான் சாங்-வோல் என்பவர், ஆபாசமாக நடனமாடி அதை வீடியோ படம் எடுத்து பல்வேறு நாடுகளில் விற்பனை செய்துள்ளார். இது வடகொரிய நாட்டு சட்டப்படி குற்றமாகும்.
இதன் அடிப்படையில் கைது செய்யப்பட்ட ஹையான் சாங் -வோல் உட்பட இசைக் குழுவைச் சேர்ந்த 12 பேர் கைது செய்யப்பட்டு, விசாரணையின் முடிவில் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து, இயந்திர துப்பாக்கியால் சுட்டு அவர்கள் 12 பேருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு விட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உயிரிழந்த ஹையான் சாங்- வோல் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் முன்னாள் காதலி என்பது குறிப்பிடத்தக்கது.