சுடச்சுட

  

  சிரியா விவகாரம்: சிறிய தாக்குதலுக்கு வாய்ப்பு என ஒபாமா பேச்சு

  Published on : 31st August 2013 12:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சிரியா அரசு விஷ வாயு செலுத்தி தங்கள் நாட்டைச் சேர்ந்த பொதுமக்களைக் கொலை செய்துள்ளதாக வெளியான தகவலை அடுத்து, அமெரிக்க உளவுத் துறை இதனை உறுதிப் படுத்தியது. இதற்கான ஆதாரங்கள் திரட்டப்பட்டுள்ளதாகக் கூறிய அமெரிக்க அரசு, சிரியா நாட்டின் மீது தாக்குதல் தொடுக்கக்கூடும் என்று தகவல் வெளியானது. இந்நிலையில், சிரியா விவகாரம் குறித்து தொலைக்காட்சியில் பேசினார் அமெரிக்க அதிபர் ஒபாமா.

  அதில் அவர், சிரியாவில் சர்வதேச நடைமுறை சட்டதிட்டங்களை அரசுத் தரப்பு மீறியது குறித்தும் அதனை எதிர்கொள்வது குறித்தும் ஐநா பாதுகாப்பு சபை தனது இயலாமையை வெளிக்காட்டியுள்ளது. இதனால், சிரியா மீது குறுகிய சிறிய தாக்குதல் நடத்தப்பட வாய்ப்பு உள்ளது. அதைத்தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்று கூறியுள்ளார் ஒபாமா.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai