நடிகை ராதாவை ஏமாற்றிய தொழில் அதிபர் மீது போதை பொருள் கடத்தல் குற்றச்சாட்டு
By dn | Published On : 02nd December 2013 03:52 PM | Last Updated : 02nd December 2013 03:52 PM | அ+அ அ- |

சுந்தரா டிராவல்ஸ் படம் மூலம் அறிமுகமானவர் நடிகை ராதா.இவர் திருவல்லிக்கேணியைச் சேர்ந்த தொழில் அதிபர் பைசூல் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ரூ. 50 லட்சத்தை ஏமாற்றி ஏமாற்றியதாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றை தெரிவித்தார்.இந்த புகார் மீது வடபழனி போலீஸ் உதவி கமிஷனர் ஜெயசுப்பிரமணியம் விசாரணை நடத்தி வருகிறார்.இதற்கிடையில் பைசூல் முன்ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.
இந்நிலையில் தமிழ்நாடு சுன்னத் ஜமாஅத் அமைப்பின் மாநில பொதுச்செயலாளர் அக்ரம்கான் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இன்று ஒரு புகார் மனு கொடுத்தார். அதில், எங்கள் ஜமாஅத்தைச் சேர்ந்த பல இளைஞர்களுக்கு வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக பைசூல் ஆசை காட்டி,அதில் ஏமாந்த இளைஞர்களிடம் 'கேட்ட மைன்' என்ற போதை பொருளை கொடுத்து வெளிநாட்டில் கொடுக்க சொல்லி அனுப்பி உள்ளார்.இதன்காரணமாக அப்பாவி தமிழ் இளைஞர்கள் பலர் வெளிநாட்டு சிறைகளில் உள்ளனர். எனவே பைசூல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.