Enable Javscript for better performance
நெல்சன் மண்டேலா பெற்ற விருதுகள்- Dinamani

சுடச்சுட

    
    Nelson mandela

    தென்னாப்ரிக்காவின் முதல் கறுப்பின அதிபராக பொறுப்பேற்று நிறவெறி ஆட்சியை ஒழிக்க பாடுபட்ட நெல்சன் மண்டேலா, சிறையில் இருக்கும் போதே, நேரு சமாதான விருது வழங்கி அவரை கௌரவித்தது இந்தியா.

    இந்தியாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,நெல்சன் மண்டேலாவின் மனைவி வின்னி இந்தியா வந்து அந்த விருதைப் பெற்றுக் கொண்டார்.

    அதோடு மட்டும் அல்லாமல், இந்தியர் அல்லாத ஒருவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது என்றால், அது நெல்சன் மண்டேலா ஒருவருக்கு மட்டுமே.

    1990ஆம் ஆண்டு இந்தியாவின் மிக உயர்ந்த பாரத ரத்னா விருது நெல்சன் மண்டேலாவுக்கு வழங்கப்பட்டது.

    1993ஆம் ஆண்டு உலக அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றார் மண்டேலா. மேலம், அமைதி மற்றும் நல்லிணக்கத்துக்கான சர்வதேச மகாத்மாக காந்தி விருது மண்டேலாவுக்கு வழங்கப்பட்டது.

    மண்டேலாவின் பிறந்த தினமான ஜூலை 18ம் தேதியை சர்வதேச நெல்சன் மண்டேலா தினமாக ஐ.நா.அறிவித்து மண்டேலாவுக்கு பெருமை சேர்த்தது.

    இங்கிலாந்து நாடாளுமன்ற சதுக்கத்தில் ஏற்கனவே இருந்த சர் வின்ஸ்டன் சர்ச்சில் மற்றும் ஆபிரகாம் லிங்கன் திருவுருவச் சிலைகளுக்கு அருகே நெல்சன் மண்டேலாவின் வெண்லக சிற்பம் 2007ஆம் ஆண்டு வைக்கப்பட்டது.

    இப்படி, நிறவெறி கொள்கைகளுக்கு எதிரான போராட்டத்துக்கு தனது வாழ்நாளையே அர்ப்பணித்த நெல்சன் மண்டேலாவை உலக நாடுகள் பலவும் உயரிய விருதுகளை வழங்கி கௌரவித்தது. அந்த வகையில் சுமார் 250க்கும் மேற்பட்ட விருதுகளை மண்டேலா பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai