வெளியுறவுக் கொள்கையை மறு ஆய்வு செய்யும் நேரம் : கனிமொழி
By dn | Published On : 18th December 2013 12:07 PM | Last Updated : 18th December 2013 12:28 PM | அ+அ அ- |

இந்தியா, தனது வெளியுறவுக் கொள்கையை மறு ஆய்வு செய்யும் நேரம் இது என்று மாநிலங்களவையில் இந்திய துணைத் தூதர் கைது செய்யப்பட்ட விவகாரத்தின் மீதான விவாதத்தின் போது திமுக எம்.பி. கனிமொழி வலியுறுத்தினார்.
மேலும் அவர் பேசுகையில், இந்திய தலைவர்கள் பலரும், அமெரிக்க விமான நிலையத்தில் அவமரியாதைக்கு உள்ளாகியுள்ளனர். விசா மோசடியில் ஈடுபட்ட குற்றத்துக்காக தேவயானியை அமெரிக்க காவல்துறை பொது இடத்தில் கைவிலங்கிட்டு அழைத்துச் சென்றுள்ளது. இந்திய பெண்ணான தேவயானிக்கு செய்துள்ள அவமரியாதையை இந்தியர்களால் ஏற்றுக் கொள்ளவே இயலாது. இதற்கு, இந்தியா கடும் கண்டனத்தை தெரிவிக்க தவறிவிட்டது என்றும் கூறினார்.