சுடச்சுட

    

    திராவிட கட்சிகளுக்கு தெரிந்தது கவர்ச்சி அரசியல் மட்டும்தான்: ராமதாஸ்

    Published on : 10th February 2013 03:02 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ramadas

    திராவிட கட்சிகளுக்கு தெரிந்தது கவர்ச்சி அரசியல் மட்டும்தான் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் கூறினார்.

    தென்சென்னை தெற்கு மாவட்டம் வேளச்சேரி பகுதி பாமக சார்பில் அடையாறில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு அவர் பேசியதாவது:

    தமிழகத்தில் திராவிட கட்சிகளுக்கு தெரிந்தது கவர்ச்சி அரசியல் மட்டும்தான். பா.ம.க.வை தவிர வேறு எந்த கட்சியும் வளர்ச்சி அரசியலைப் பற்றி பேசவில்லை. இதனால்தான் பாமகவை பற்றி மக்கள் சிந்திக்க தொடங்கி இருக்கிறார்கள். எனவேதான் எங்களால் மாற்றத்தை கொண்டு வரமுடியும் என்ற நம்பிக்கையில் புதிய அரசியலைப் பற்றி பேசுகிறோம்.

    தமிழகத்தில் திராவிட கட்சிகள்தான் ஆடம்பரத்தை அரங்கேற்றி, காவல்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் அரசியலை புகுத்தி அதிகாரம் செய்கிறது. தமிழக மக்களுக்கு இலவசங்கள்,மது, சினிமா இவை மூன்றும்தான் மக்களுக்கு தரப்பட்டுள்ளது.

    செல்போனும், சினிமாவும் தான் மாணவர்களையும், இளைஞர்களையும் கெடுக்கிறது.  படிக்கும்போது செல்போன் தேவையில்லை. பெற்றோர்கள் இதை அனுமதிக்காதீர்கள். இளம் தலைமுறையினருக்கு எவ்வளவோ கடமைகள், பொறுப்புகளும் காத்திருக்கிறது. காதல் மட்டும்தான் உலகமா? காதல் நாடகத்தில் சிக்கி கொள்ளாமல் முதலில் படித்து பணியில் சேருங்கள். அதன்பிறகு காதல் வந்தால் காதலியுங்கள்.

    நாங்கள் காதலுக்கு எதிரிகள் அல்ல. அறியா பருவத்தில் நடக்கும் காதல் நாடகத்தைதான் எதிர்க்கிறோம் என்று ராமதாஸ் கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai