சுடச்சுட

  

  பிரபாகரனின் இளைய மகன் உயிரோடு பிடிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டதற்கான ஆதாரம் வெளியீடு

  By dn  |   Published on : 19th February 2013 10:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  balachandran

  தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன், உயிரோடு பிடிக்கப்பட்டு திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் வெளியாகியுள்ளன.

  இலங்கையில் நடந்த மனித இனப் படுகொலையின் பல்வேறு முகங்கள் தற்போது வெளியாகிக் கொண்டிருக்கின்றன. வீடியோக்களாகவும், புகைப்படங்களாகவும் வெளியாகி வரும் ஆதாரங்களின் மூலமாக, இலங்கையில் ஒரு மனித இனமே படு பயங்கரமாக அழிக்கப்பட்டிருப்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

  இந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள ஒரு புகைப்படத் தொகுப்பில், வேலுப்பிள்ளை பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரனின் மரணத்தைப் பற்றிய உண்மைகளை தெரிவிப்பதாக உள்ளது.

  ஏதோ போரின் போது குண்டுகள் வீசப்பட்டதாலோ, மக்களை சுடும் போது கொல்லப்பட்டதாகவோ இதுவரை இருந்த பாலச்சந்திரனின் மரணம் திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலை என்பதை தெளிவாக்கும் விதத்தில இந்த புகைப்படங்கள் அமைந்துள்ளன.

  ஒரு பதுங்குக் குழியில் மேல் ஆடை இன்றி அமர வைக்கப்பட்டுள்ளான் பாலச்சந்திரன். அவனுக்கு உண்ண ஏதோ பிஸ்கட் போன்ற ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. கண்களில் மிரட்சியுடன் அங்கும் இங்கும் அவன் பார்வை ஏதாவது ஒரு தெரிந்த முகம் கண்ணுக்குப் படாதா என்று தேடுகிறது.

  அடுத்த புகைப்படத்தில் அவனது நெஞ்சில் குண்டுகள் பாய்ந்து உயிரற்ற உடல் கிடக்கிறது.

  இதன் மூலம், இலங்கை ராணுவம், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகனை எவ்வாறு திட்டமிட்டு படுகொலை செய்துள்ளது என்னும் மனதை பிளக்கும் உண்மை தெரிய வந்துள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai