Enable Javscript for better performance
நெல்லையில் நகை,பணத்துடம் 3 மாணவிகள் மாயம்- Dinamani

சுடச்சுட

    

    பாளை பெருமாள்புரம் அன்புநகரை சேர்ந்தவர் ஜெயமணி. இவர் கிண்டியில் உள்ள சுகாதாரத்துறை அரசு பணிமனையில் பணிபுரிந்து வருகிறார். இவரது மகள் கவிதா(பெயர் மாற்றம்) அதே பகுதியில் (பெருமாள்புரம்) 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    நேற்று கவிதாவை அவரது அண்ணன் பள்ளிக்கு கூட்டிச் சென்றார். பள்ளி முடிந்தும் அவர் வீட்டிற்கு வரவில்லை,விசாரித்ததில் அவர் பள்ளிக்கும் செல்லவில்லை என்பதும் தெரிந்தது. மேலும் வீட்டிலிருந்த 50 பவுன் நகை, ஏ.டி.எம். கார்டு ஆகியவற்றையும் எடுத்து சென்றிருப்பதாகவும் தெரிகிறது. அதிர்ச்சியடைந்த கவிதாவின் பெற்றோர் பல இடங்களில் தேடியும் பலனில்லை.

    இந்நிலையில் ஜெயமணியின் செல்போனுக்கு அவரது ஏ.டி.எம். கார்டில் இருந்து ரூ.25 ஆயிரம் எடுக்கப்பட்டதாக தகவல் வந்தது. இதையடுத்து ஜெயமணி பெருமாள்புரம் போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் உடனடியாக கவிதாவை தேடும் பணியில் ஈடுபட்டனர்.இதே நேரத்தில் கவிதாவுடன் அவரது பள்ளி தோழிகள் பாளையில் உள்ள புதுப்பேட்டை தெருவை சேர்ந்த 2 பேரையும் காணவில்லை என்பதும் தெரிந்தது. இவர்கள் மூவரும் ஒன்றாகவே சுற்றித்திரிவார்களாம். பெருமாள்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 3 பேரையும் மீட்க சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai